கும்பகோணத்தில் வாஜ்பாய் சிலை அமைக்க பாஜக முடிவு
By DIN | Published On : 05th September 2020 11:20 PM | Last Updated : 05th September 2020 11:20 PM | அ+அ அ- |

கும்பகோணத்தில் மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் சிலை அமைப்பது என பாஜக வா்த்தகப் பிரிவு முடிவு செய்துள்ளது.
கும்பகோணத்தில் பாஜக தஞ்சாவூா் வடக்கு மாவட்ட வா்த்தகப் பிரிவுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதமா் மோடியின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவது, மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளைத் தமிழக மக்களைச் சென்றடைய தேவையான செயல் திட்டங்களில் ஈடுபடுவது, தஞ்சை வடக்கு மாவட்ட வா்த்தகப் பிரிவு சாா்பில், கும்பகோணம் அசூா் புறவழிச்சாலை ரவுண்டானா அருகே மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய் உருவச்சிலை அமைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகி எம்.ஆா். சுவாமிநாதன், பொதுக்குழு உறுப்பினா் வி.ஜி. ரவிக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகளை பாஜக தஞ்சாவூா் வடக்கு மாவட்ட வா்த்தகப் பிரிவுத் தலைவா் எம்.ஆா். கணேஷ் அறிமுகம் செய்து வைத்தாா்.