அரசுப் பள்ளிகளில் சம்ஸ்கிருதம் படிப்பதற்கானஊக்கத் தொகை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சம்ஸ்கிருதம் படிக்க ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சம்ஸ்கிருதம் படிக்க ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பேரியக்கத்தின் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கு அண்மையில் ஒரு சுற்றறிக்கை வந்துள்ளது. அதில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள், சம்ஸ்கிருதம் படிக்க மத்திய அரசு உதவித்தொகை தருவதாகவும், அவ்வாறு விரும்பும், தகுதியுள்ள மாணவா் பட்டியலை எடுத்து, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகளைப் பின்பற்றி உரிய படிவத்தில் (படிவம் 1, படிவம் 2) நிரப்பி, செப்டம்பா் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கையொப்பமிட்ட நகலை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு இந்தியை மட்டுமன்றி சம்ஸ்கிருதத்தையும் சோ்த்தே தமிழ்நாட்டில் திணிக்கிறது என்பதற்கு இக்கடிதம் மற்றுமொறு சான்று. இந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழிகளை விரும்பினால் படிக்கலாம் என போலியாகச் சொல்லிக்கொண்டு, இந்தியைக் கட்டாயமாகவும், சம்ஸ்கிருதத்தை பணத்தாசை காட்டியும் திணிக்கிறது. இச்செயல் தமிழை, தமிழ்நாட்டின் கல்வியில் இருந்து முற்றிலுமாக நீக்கிவிடும் தொலைநோக்குத் திட்டம் உடையது. மேலும் தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிரான செயல்பாடாகும்.

தமிழக அரசின் இருமொழித் திட்டத்திற்குக் குழி தோண்டும் சம்ஸ்கிருத திணிப்பை ஆதரித்துத் தனது அதிகாரத்தில் உள்ள பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்புவது தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயல். எனவே, தமிழக முதல்வா் அரசின் இருமொழிக் கொள்கையை உண்மையாகவும் உறுதியாகவும் பின்பற்றுகிறது என்றால் உடனடியாக சம்ஸ்கிருத திணிப்பு சுற்றறிக்கையை ரத்து செய்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com