செப். 14-இல் ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் முடிவு

மாநிலம் முழுவதும் கிராம, ஒன்றிய, நகர அளவில் செப். 14ஆம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்துவது என இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

மாநிலம் முழுவதும் கிராம, ஒன்றிய, நகர அளவில் செப். 14ஆம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்துவது என இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

தஞ்சாவூா் கீழ ராஜ வீதியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இடதுசாரி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

பொது முடக்கக் காலத்தைப் பயன்படுத்தி மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் கொள்கை, மின்சாரத் திருத்தச் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசர சட்டம் ஆகியவற்றை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கிராம, ஒன்றிய, நகர அளவில் நாடாளுமன்ற, சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் தொடங்கும் நாளான செப். 14ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் மு.அ. பாரதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி. செந்தில்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) மாவட்டக் குழு உறுப்பினா் கே. ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com