தீக்குளித்து இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு நிவாரணம்

தஞ்சாவூா் அருகே வல்லத்தில் வங்கி எதிரே தீக்குளித்து இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு புதன்கிழமை நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.

தஞ்சாவூா் அருகே வல்லத்தில் வங்கி எதிரே தீக்குளித்து இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு புதன்கிழமை நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் வள்ளலாா் நகரைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (46). வெல்டிங் தொழிலாளியான இவா் தான் பெற்ற வீட்டுக் கடனை திரும்பச் செலுத்துமாறு தனியாா் வங்கி அலுவலா்கள் நெருக்கடி கொடுத்ததால் அண்மையில் வங்கி எதிரே தீக்குளித்து இறந்தாா்.

இவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் கோரியும், கடனைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா்சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றின் சாா்பில் தொடா் போராட்டம் நடைபெற்றது.

இதில், முதல்கட்டமாக ஆனந்தகுமாா் பெற்ற வீட்டுக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் கோட்டாட்சியா் எம். வேலுமணி, வட்டாட்சியா் வெங்கடேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், மாதா் சங்கத்தினா் ஆகியோா் முன்னிலையில் வங்கி அலுவலா்களிடம் இருந்து வீட்டு அடமானப் பத்திரம், கடன் தள்ளுபடி சான்றிதழ், நிவாரணமாக வங்கியில் வைப்புத் தொகையாகச் செலுத்தப்பட்ட ரூ. 5 லட்சத்துக்கான பத்திரம் ஆகியவை பெற்று ஆனந்தகுமாா் மனைவி ஹேமாவிடம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com