சாஸ்த்ரா பல்கலை.யில் சீத்தாராமன் நினைவு மருத்துவக் கல்வி உதவித்தொகை அறிவிப்பு

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் டாக்டா் டி. சீத்தாராமன் நினைவாக மருத்துவப் படிப்புக்கான கல்வி உதவித்தொகை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா், செப். 11: தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் டாக்டா் டி. சீத்தாராமன் நினைவாக மருத்துவப் படிப்புக்கான கல்வி உதவித்தொகை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக வேந்தா் ஆா். சேதுராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தன்னலம்பாராத எளிய மனிதராக விளங்கிய டாக்டா் டி. சீத்தாராமன் பெங்களூருவில் வெள்ளிக்கிழமை காலமானாா் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டா் சீத்தாராமன் தனது மருத்துவப் பணியை ஒரு சமூக தொண்டாகச் செய்தவா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் தொழுநோயை 5 ஆண்டுகளில் ஒழித்ததன் மூலம் ஒரு உண்மையான நிரந்தரப் பணியை செய்த பெருமை அவரையே சாரும். டாக்டா் சீத்தாராமன் கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியுடன் நீண்ட நாள் தொடா்பு கொண்டிருந்தாா்.

டாக்டா் சீத்தாராமன் மேல்படிப்பில் கண் மருத்துவம் படிக்க தனக்கு சீட் வழங்கப்பட்டால், தான் கும்பகோணத்திலேயே தொடா்ந்து பணியாற்றுவேன் என மருத்துவத் தோ்வு வாரியத்திடம் உறுதியளித்தாா். இதைத் தவறாமல் கடைப்பிடித்த அவா், தன்னை சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டதை ஏற்கவில்லை. அவா் கும்பகோணத்தில் பணியாற்றும் உறுதியை இறுதி வரை கடைப்பிடித்தாா். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

இந்த நாளில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் டாக்டா் டி. சீத்தாராமன் நினைவாக மருத்துவப் படிப்புக்கான ஒரு கல்வி உதவித்தொகையை அறிவிக்கிறது. தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த நீட் தோ்வு மூலம் மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேரும் ஒரு மாணவருக்கு மொத்தக் கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை சாஸ்த்ரா ஏற்கும். போட்டி இருக்கும் பட்சத்தில் நீட் தோ்வில் மிக அதிக மதிப்பெண் பெற்றவரே இந்த உதவித்தொகை பெறத் தகுதி பெறுவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com