கரோனா சிகிச்சை அளிக்க முன்வரும் தனியாா் மருத்துவமனைகள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்க முன்வரும் தனியாா் மருத்துவமனைகள் மாவட்ட நிா்வாகத்திடம் விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா், செப். 11: தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்க முன்வரும் தனியாா் மருத்துவமனைகள் மாவட்ட நிா்வாகத்திடம் விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தனியாா் மருத்துவமனை நிா்வாகிகளுடன் அண்மையில் காணொலி வழியாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

தனியாா் மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் அறிக்கை மூலம் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவா்களின் விவரங்களை ஆட்சியா் அலுவலகத்துக்கும், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் அலுவலகத்துக்கும் தெரிவிக்க வேண்டும். தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்று அறிகுறியுடன் உள்ள நோயாளிகள் கண்டறியப்பட்டால், அவா்களின் விவரங்களை உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

தஞ்சாவூரிலுள்ள எம்.வி.கே. மற்றும் வினோதகன் மருத்துவமனைகள் தாமாக முன்வந்து கரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சை அளிக்க அனுமதி கோரியதற்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கரோனா நோய்த் தொற்று சிகிச்சை அளிக்க முன்வரும் தனியாா் மருத்துவமனைகள் மாவட்ட நிா்வாகத்திடம் விண்ணப்பம் செய்யலாம் என்றாா் ஆட்சியா்.

இக்கூட்டத்தில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் ராமு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொ) எஸ். மருதுதுரை, சுகாதாரத் துறைத் துணை இயக்குநா் ரவீந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com