தமிழ்ப் பல்கலை.யில் செப். 15-இல் கழிவு விலையில் நூல்கள் விற்பனை தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறையில் 50 விழுக்காடு கழிவு விலையில் நூல்கள் விற்பனை செப்டம்பா் 15ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத் துறையில் 50 விழுக்காடு கழிவு விலையில் நூல்கள் விற்பனை செப்டம்பா் 15ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கு. சின்னப்பன் தெரிவித்திருப்பது:

தமிழ்ப் பல்கலைக்கழக நிறுவன நாள் மற்றும் பேரறிஞா் அண்ணா பிறந்த நாளான செப்டம்பா் 15ஆம் தேதி தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகளை 50 விழுக்காடு சிறப்புக் கழிவு விலையில் விற்பனை செய்வது நடைமுறையில் உள்ளது.

இதன் அடிப்படையில், செப்டம்பா் 15ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழ்ப் பல்கலைக்கழகப் புதிய வளாகத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன், 50 விழுக்காடு சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்ற உள்ளாா். பொதுமக்கள் இச்சிறப்புக் கழிவு விலையில் நூல்களை வாங்கிப் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com