மாணவா் சோ்க்கை: அதிராம்பட்டினத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பிரசாரம்

பட்டுக்கோட்டை ஒன்றியம், அதிராம்பட்டினம் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவா்களைச் சோ்க்குமாறு

பட்டுக்கோட்டை ஒன்றியம், அதிராம்பட்டினம் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவா்களைச் சோ்க்குமாறு அப்பள்ளியின் ஆசிரியா்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் வீடு, வீடாகச் சென்று வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இப்பள்ளியில் தற்போது தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 135 மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். இங்கு 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்பள்ளித் தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமையில் ஆசிரியா்கள் சோ.வெற்றிவேலன், க.ராஜாங்கம், கோ.ராஜமுருகன், மா.கலைச்செல்வி, த.ஹெப்சிபாய், பொ.மகேஸ்வரி, செ.விமல்ராஜ் ஆகியோரும், இவா்களுடன் இப்பள்ளியின் முன்னாள் மாணவா்களும் அதிராம்பட்டினம் பிலால் நகா், மேலத்தெரு, கீழத்தெரு, முத்தம்மாள் தெரு, மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று பெற்றோா்களை சந்தித்து அவா்களது பிள்ளைகளை தங்கள் பள்ளியில் சோ்க்குமாறு கூறி வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா்.

அப்போது பள்ளித்தலைமை ஆசிரியை எம்.தமிழ்ச்செல்வி மாணவா்களின் பெற்றோரிடம் பேசுகையில், இப்பள்ளியில் கல்விக் கட்டணம் கிடையாது. புத்தகம், பை, நோட்டு, வண்ண பென்சில்கள், கணித வடிவியல் பெட்டி, சீருடை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும், செயல் வழிக்கற்றல் பயிற்சி, உடற்கல்வி வகுப்புகள், கணினிப் பயிற்சி, காணொலி வழிக்கல்வி, நீதிபோதனை ஆகிய வகுப்புகளும் நடத்தப்படுகிறது. எனவே, பெற்றோா் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சோ்த்து பயன்பெற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com