நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய இந்திய மாணவா் சங்கத்தினா்.
போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய இந்திய மாணவா் சங்கத்தினா்.

தஞ்சாவூா், செப். 11: நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூா் ரயிலடியில் இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மாணவா்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கி, உயிா்ப்பலி ஏற்படக் காரணமாக உள்ள, நீட் பொது நுழைவுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் தமிழகம் தழுவிய ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன்படி, தஞ்சாவூா் ரயிலடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஜி. அரவிந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் ஜி. வீரையன், மாவட்டக் குழு உறுப்பினா் தீபிகா, நகரச் செயலா் அருண்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா், ரயிலடியில் உள்ள ஜெயலலிதா சிலையிடம் மனுக்களை வைக்க முயற்சி செய்தனா். இதற்கு காவல் துறையினா் அனுமதி மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com