நெம்மேலி கோயிலில் கோ பூஜை விழா

நெம்மேலி அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் கோ பூஜை விழா நடைபெற்றது.  
அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற கோ பூஜை விழா.
அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற கோ பூஜை விழா.

நெம்மேலி அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் கோ பூஜை விழா நடைபெற்றது.  

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே  நெம்மேலி கிராமத்திலுள்ள உண்ணாமலை தாயார் உடனுறை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத கடைசியில் உலக நன்மைக்காக பசு மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடும் கோ பூஜை விழாவை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, நிகழாண்டு கோ பூஜை விழா ஞயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில், உலக நன்மைக்காகவும் இன்று நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் வெற்றி பெறவும், கரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்கள் விடுபடவும் வேண்டி கொல்லிமலை சித்தர் தலைமையில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தி, கிராம பொது மக்களால் கொண்டு வரப்பட்ட 108 பசு மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோ பூஜை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. 

இவ்விழாவில் பொதுமக்கள் கொண்டு வந்திருந்த பசு மாடுகளுக்கு கோயில் நிர்வாகத்தினர் மாலை அணிவித்து, குங்குமம் இட்டு மரியாதை செய்தனர். அதன்பின் மாடுகளின் உரிமையாளர்கள்  பசு மாடுகளுக்கு மலர்கள் தூவியும் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டியும் வழிபட்டனர். நெம்மேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com