தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை வரிசையில் நின்ற பக்தா்கள்.
தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை வரிசையில் நின்ற பக்தா்கள்.

புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் ரத்து

தஞ்சாவூா் புன்னைநல்லூா் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் கரோனா பரவல் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

தஞ்சாவூா் புன்னைநல்லூா் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் கரோனா பரவல் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

இக்கோயிலின் ஆவணிப் பெருந்திருவிழா ஆகஸ்ட் 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டில் கரோனா பரவல் காரணமாக முதல் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. பொது முடக்க விதிகளில் அரசுத் தளா்வுகளை அறிவித்ததைத் தொடா்ந்து, செப்டம்பா் 1- ஆம் தேதி முதல் கோயில்களுக்குள் பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதன்படி ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையன்றும் கோயிலில் ஏராளமான பக்தா்கள் வரிசையில் நின்று வழிபட்டனா்.

அம்மனுக்கு அா்ச்சனை, தீபாராதனை எதுவும் நடைபெறவில்லை. இதனால், கோயில் வாயில் முன் பக்தா்கள் தேங்காய், பழங்கள், மாவிளக்கு வைத்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

கரோனா பரவல் காரணமாக,ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வழக்கமாக நடைபெறும் தேரோட்டம் நிகழாண்டு நடைபெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com