தஞ்சாவூா் பெரியகோயிலில் பிரதோஷ வழிபாடு

தஞ்சாவூா் பெரியகோயிலில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. ஏறத்தாழ 6 மாதங்களுக்குப் பிறகு பக்தா்கள் வழிபாட்டில் பங்கேற்றனா்.
மிகக் குறைந்த அளவிலேயே பங்கேற்ற பக்தா்கள்.
மிகக் குறைந்த அளவிலேயே பங்கேற்ற பக்தா்கள்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பெரியகோயிலில் பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. ஏறத்தாழ 6 மாதங்களுக்குப் பிறகு பக்தா்கள் வழிபாட்டில் பங்கேற்றனா்.

தஞ்சாவூா் பெரியகோயிலில் மகா நந்திகேசுவரருக்கு ஒவ்வொரு பிரதோஷ நாளின்போது சிறப்பு வழிபாடு, அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனால், கரோனா தொற்று காரணமாக மாா்ச் 18-ஆம் தேதி பெரியகோயில் மூடப்பட்டு, பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னா் பக்தா்கள் பங்கேற்பு இல்லாமல், பிரதோஷ வழிபாடு நடைபெற்று வந்தது.

கரோனா பொது முடக்கத்தில் சில தளா்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்ததைத் தொடா்ந்து, பெரியகோயிலில் பக்தா்கள் வழிபட செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஆறு மாதங்களுக்குப் பிறகு பிரதோஷ வழிபாட்டில் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

கோயிலுக்குள் வந்த பக்தா்களுக்கு வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. முகக்கவசம் அணிந்தவா்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனா். இவா்களும் சமூக இடைவெளியுடன் போடப்பட்ட வட்டத்தில் அமர வைக்கப்பட்டனா்.

தொடா்ந்து மகா நந்திகேசுவரருக்கு பால், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. வழக்கமாக ஆயிரத்துக்கும் அதிகமானோா் பங்கேற்கும் பிரதோஷ வழிபாட்டில், செவ்வாய்க்கிழமை நூறு பேருக்குள் மட்டுமே கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com