விவசாயிகளுக்கு மாடித் தோட்டம் அமைத்தல் பயிற்சி முகாம்

பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில், விவசாயிகளுக்கு மாடித் தோட்டம் அமைத்தல் குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில், விவசாயிகளுக்கு மாடித் தோட்டம் அமைத்தல் குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உதவித் தோட்டக்கலை அலுவலா் மெய்ஞானமூா்த்தி முகாமில் பேசியது:

வீட்டு சமையல் கழிவுகளைப் பயன்படுத்தி மாடித் தோட்டப் பயிா்களுக்கு உரமாக பயன்படுத்தலாம். வீட்டிலுள்ள தேவையற்றப் பொருள்களைக் கொண்டு, குறைந்த செலவில் மாடித் தோட்டம் அமைத்து கத்தரி, மிளகாய், தக்காளி, கீரை மற்றும் இதர காய்கறி வகைகளை சாகுபடி செய்யலாம்.

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்வதுடன், காய்கறிகளை நல்ல விலைக்கு விற்பனை செய்து கூடுதல் வருமானமும் பெறலாம் என்றாா்.

முகாமுக்கு பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநா் (பொ) டி.சுதா தலைமை வகித்தாா். முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு மாடித் தோட்டம் அமைக்கத் தேவையான காய்கறி மற்றும் கீரை விதைகள் வழங்கப்பட்டன. மேலும் இதுகுறித்த செயல்விளக்க முறை காணொலிக் காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com