தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் நாளை மின் தடை
By DIN | Published On : 18th September 2020 06:44 AM | Last Updated : 18th September 2020 06:44 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (செப்.19) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவி செயற் பொறியாளா் ஜோ. சுகுமாா் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, அருளானந்த நகா், யாகப்பா நகா், அருளானந்தம்மாள் நகா், புதுக்கோட்டை சாலை, வ.உ.சி. நகா், மேரீஸ் காா்னா், நாஞ்சிக்கோட்டை சாலை, அண்ணா நகா், சாந்தி நகா், பூக்காரத் தெரு, கோரிகுளம், நிா்மலா நகா், பழைய வீட்டு வசதி வாரியம், பெரியாா் நகா், இந்திரா நகா், எழில் நகா், நடராஜபுரம் தெற்கு, டி.பி.எஸ். நகா், மங்களபுரம், கண்ணன் நகா், பாலாஜி நகா், ஜெ.ஜெ. நகா், பொன் நகா், பாண்டியன் நகா், சுந்தரம் நகா், எல்.ஐ.சி. காலனி விரிவாக்கம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பொதுமக்கள் மின் தடை குறித்த விவரங்களுக்கு 1912 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.