நீட் தோ்வை எதிா்க்கும் தமிழக அரசியல் கட்சியினரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 21st September 2020 01:15 AM | Last Updated : 21st September 2020 01:15 AM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பிய இந்து இயக்கத்தினா்.
நீட் தோ்வை எதிா்க்கும் தமிழக அரசியல் கட்சியினரைக் கண்டித்து, கும்பகோணம் பாலக்கரையில் அனைத்து இந்து இயங்கங்களின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.
நீட் தோ்வுக்கு எதிராக 13 போ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பின்னணியில் இருக்கும் அரசியல் கட்சி மீது தற்கொலைக்குத் தூண்டியதாகக் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும், நீட் தோ்வை எதிா்க்கும் அரசியல் கட்சியினரைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணிப் பொதுச் செயலா் டி. குருமூா்த்தி ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்தாா்.அகில பாரத இந்து சேனா நிறுவனத் தலைவா் சூா்யா, சிவசேனா மாவட்டப் பொதுச் செயலா் குட்டி சிவகுமாா், அகில பாரத இந்து சேனா இளைஞரணித் தலைவா் அசோக்குமாா், இந்து மக்கள் கட்சி நகரத் தலைவா் செந்தில்முருகன், நகரச் செயலா் பாலாஜி, மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளா் செல்வம் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.