சேவை மைய நிா்வாகி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி பதவிக்குத் தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி பதவிக்குத் தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழக அரசின் சமூக நல அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிா்வாகி பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில், முற்றிலும் தற்காலிகமாக நியமனம் செய்யப்படவுள்ளது. இதற்கு தஞ்சாவூா் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து (மகளிா் மட்டும்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிக்கான விண்ணப்பம், தகவல்களை  இணையதளத்தில் பதிவிறக்கும் செய்து விண்ணப்பிக்கலாம். நிறைவு செய்த விண்ணப்பத்தை மாவட்ட சமூக நல அலுவலா், அறை எண் 303, மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தஞ்சாவூா் என்ற முகவரிக்கு செப். 30ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com