அம்மாபேட்டையை புதிய வட்டமாக உருவாக்கக் கோரி மனு
By DIN | Published On : 27th September 2020 11:44 PM | Last Updated : 27th September 2020 11:44 PM | அ+அ அ- |

தமிழக வேளாண்துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணுவிடம் மனு அளிக்கும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் அம்மாபேட்டை கிளை நிா்வாகிகள்.
அம்மாபேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும் எனக் கோரி, மாநில வேளாண் துறை அமைச்சா் இரா.துரைக்கண்ணுவிடம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி கிளை நிா்வாகிகள் சனிக்கிழமை மனு அளித்தனர்
அம்மாபேட்டை கிளைத் தலைவா் தரும புருஷோத்தமன், செயலா் வி.ராமநாதன், பொருளாளா் பிரபுராமன், துணைத் தலைவா் மா.பி.சேவியா் உள்ளிட்டோா் அளித்த மனுவில் கூறியிருப்பது:
அம்மாபேட்டை மற்றும் சுற்றுப்புறக் கிராம பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அம்மாபேட்டை ரயில் நிலையத்தை மூடும் உத்தரவை ரத்து செய்யவும், வழக்கம் போல ரயில் நிலையம் இயங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மாபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவா் இருந்து சிகிச்சையளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். போதிய மருத்துவா்கள், பணியாளா்களை நியமிக்க வேண்டும்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் அம்மாபேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு, புதிய வட்டத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.