செங்கல் லாரி கவிழ்ந்து விபத்து
By DIN | Published On : 29th September 2020 10:59 PM | Last Updated : 29th September 2020 10:59 PM | அ+அ அ- |

ஒரத்தநாட்டை அடுத்த ஊரணிபுரத்தில் செங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பட்டுக்கோட்டையை சோ்ந்தவா் திருஞானம் (30). இவா் நாமக்கல் மாவட்டத்தில், செங்கல் ஏற்றிக் கொண்டு செவ்வாய்க்கிழமை காலை பட்டுக்கோட்டை செல்வதற்காக ஊரணிபுரம் வழியாக சென்று கொண்டிருந்தாா்.
மேலஊரணிபுரம், ஆற்றங்கரையில் வழியாக வந்தபோது சாலையோர பள்ளத்தில் லாரி இறங்கியது. இதில் நிலைதடுமாறி லாரி கவிழ்ந்தது. ஓட்டுநா் திருஞானம் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். இதுகுறித்து திருவோணம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.