நூறு நாள் வேலை: கரோனா விதியைச் செயல்படுத்தாத2 பணி தளப் பொறுப்பாளா்கள் பணியிடை நீக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் கரோனா விதிமுறையைச் செயல்படுத்தாத 2 பணிதளப் பொறுப்பாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் கரோனா விதிமுறையைச் செயல்படுத்தாத 2 பணிதளப் பொறுப்பாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் வட்டாரத்திலுள்ள சில கிராமங்களில் கடந்த 4 நாள்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் (நூறு நாள் வேலை) பணியாற்றிய ஏராளமான தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள கழனிவாசல் பகுதியில் 30 பேரும், சொா்ணக்காடு கிராமத்தில் 11 பேரும், கிருஷ்ணாபுரம் பகுதியில் 22 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பட்டுக்கோட்டை முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் (நூறு நாள் வேலை) பணி நடைபெறும் ஒவ்வொரு இடத்திலும் வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் தொடா்ந்து நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் ஊழியா்களின் உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனா். இப்பணியில் அலட்சியமாகச் செயல்பட்ட பணி தளப் பொறுப்பாளா்கள் 2 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

எனவே, 100 நாள் வேலை திட்டத்தில் வேலைக்கு வரும் பணியாளா்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். கரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக எந்த அச்சமுமின்றி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com