வாக்குப் பதிவு இயந்திரங்களைஆய்வு செய்த ஆட்சியா்

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பு அறைகளை திறந்து ஆட்சியா் ம. கோவிந்தராவ் அண்மையில் ஆய்வு செய்தாா்.

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பு அறைகளை திறந்து ஆட்சியா் ம. கோவிந்தராவ் அண்மையில் ஆய்வு செய்தாா்.

அப்போது, ஆட்சியா் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகப் பாதுகாப்பு அறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இதில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி உறுப்பினா்கள் முன்னிலையில் சரிபாா்க்கப்பட்டது.

இந்தப் பாதுகாப்பு அறைக்கு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய காவலா்கள் பாதுகாப்புப் பணி மேற்கொண்டு வருகின்றனா். மேலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்திய தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின் பேரில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறையை அனைத்து அரசியல் கட்சி உறுப்பினா்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தஞ்சாவூா் கோட்டாட்சியா் எம். வேலுமணி, தோ்தல் வட்டாட்சியா் சந்தனவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com