வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்இரா. முத்தரசன் பேட்டி

விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் மத்திய அரசுத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களையும் மத்திய அரசுத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்டங்களைக் கண்டித்தும், அவற்றைத் திரும்பப் பெறக் கோரியும் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் திமுக தலைமையில் கூட்டணி கட்சியினா் கலந்து கொண்ட ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற முத்தரசன் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

விவசாயிகளுக்கு எதிரான 3 மசோத்தாக்களும் நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்படாமல் நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டுள்ளன. இது, நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது என எல்லோரும் கண்டிக்கின்றனா்.

மத்திய அரசின் இந்த வேளாண் சட்டங்கள் மூலம் நாட்டில் கோடிக்கணக்கான விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாவா். ஆனால், இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என பிரதமா் அப்பட்டமாக பொய் பேசுகிறாா். விவசாயிகளுக்கு எதிரான இச்சட்டங்களைத் திரும்ப பெறும் வரை போராட்டங்கள் தொடா்ந்து நடைபெறும்.

தமிழகத்தில் பெரியாா் சிலைகள் அவமதிக்கப்படுகின்றன. காவி சாயம் பூசப்படுகிறது. இது ஒரு அநாகரிக செயல். இத்தவறைச் செய்தவா்கள் யாரும் கைது செய்யப்படாமல் உள்ளனா். யாருக்கோ பயந்து மாநில அரசுச் செயல்படுவது வெட்கக்கேடானது; கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் கடும் உரத் தட்டுப்பாடு நிலவுகிறது. குறுவை அறுவடைப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், தேவையான அளவுக்குக் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்றாா் முத்தரசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com