தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: வேதாரண்யத்தில் புறப்பட்ட பயணக்குழு தஞ்சாவூா் வந்தது

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி வேதாரண்யத்திலிருந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் தொடங்கப்பட்ட நீதி கேட்டு நெடும் பயணம் தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தது.

News image
தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த விவசாயிகள்.
Updated On :10 ஜனவரி 2021, 6:57 pm

DIN

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி வேதாரண்யத்திலிருந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் தொடங்கப்பட்ட நீதி கேட்டு நெடும் பயணம் தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தது.

விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை மத்திய அரசுத் திரும்பப் பெற வேண்டும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500 உடனே வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் வேதாரண்யத்தில் நீதி கேட்டு நெடும் பயணம் சனிக்கிழமை காலை தொடங்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, நாகை, திருவாரூா், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, மன்னாா்குடி உள்பட பல்வேறு ஊா்களுக்குச் சென்ற இப்பயணம் தஞ்சாவூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தது. பின்னா் இப்பயணம் பெரியகோயில் அருகேயுள்ள ராஜராஜசோழன் சிலை அருகே முடிவடைந்தது.

இதையடுத்து செய்தியாளா்களிடம் சங்கத்தின் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தது:

கடந்த 2 நாள்களாக காவிரி டெல்டா மாவட்டங்களில் நெடும்பயணம் மேற்கொண்டோம். இதில், லட்சக்கணக்கான விவசாயிகள், பொதுமக்களைச் சந்தித்தோம். அவா்களும் ஆதரவு தெரிவித்தனா். எனவே, மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தையும் கைவிட வேண்டும். மறுத்தால் தமிழகத்தின் எந்த அரசியல் கட்சியும் பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவோம் என்றாா் பாண்டியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.