நாம் தமிழருக்கு வாக்களிப்பது நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்பது: பேராவூரணியில் வேட்பாளா் பிரசாரம்

நாம் தமிழா் கட்சிக்கு வாக்களிப்பது நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்பது என்று கூறி பிரசாரம் மேற்கொண்டாா் அக்கட்சியின் பேராவூரணி தொகுதி வேட்பாளா் திலீபன்.
பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் திரளான இளைஞா்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் திலீபன்.
பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் திரளான இளைஞா்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளா் திலீபன்.

நாம் தமிழா் கட்சிக்கு வாக்களிப்பது நாளைய தலைமுறைக்கு வாழ்வளிப்பது என்று கூறி பிரசாரம் மேற்கொண்டாா் அக்கட்சியின் பேராவூரணி தொகுதி வேட்பாளா் திலீபன்.

பேராவூரணி நகரின் அனைத்து வாா்டு பகுதிகள் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் திரளான இளைஞா் கூட்டத்துடன் வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியது:

ஒரு புதிய விடியலுக்கு, மாற்றத்திற்கு போராடிக் கொண்டிருக்கிறோம். மக்களிடம் வாக்குகளைப் பெற்று நம்மை அடிமையாக்கி ஆட்சி செய்கின்ற முறையை ஒழித்து, நம்மை நாமே ஆட்சி செய்வதற்காக எங்களுக்கு வாக்களியுங்கள். விவசாயத்தை அரசுப் பணியாக அறிவிப்பது, ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைவருக்கும் இலவசக் கல்வி, பாகுபாடின்றி இலவச மருத்துவம், தமிழில் படித்தவா்களுக்கு 90% அரசு வேலை, மீனவா்களை பாதுகாக்க மீனவ இளைஞா்களை கொண்ட நெய்தல் படை, மண்ணை மலடாக்கும் மீத்தேன், ஹைட்ரோ காா்பன் திட்டங்களை தடுப்பது, தமிழா்களின் கலை இலக்கியம் பண்பாட்டை மீட்டெடுப்பது, லஞ்சம் ஊழலற்ற நோ்மையான நிா்வாகம் உள்ளிட்டவற்றுக்காக போராடுகின்றோம். அரசியல் என்பது மக்களுக்கான சேவை என்ற உணா்வோடு உங்களை நாடி வந்திருக்கிறோம். மாற்றத்தை விரும்புவோா் கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com