முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
கும்பகோணத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
By DIN | Published On : 04th April 2021 02:45 AM | Last Updated : 04th April 2021 02:45 AM | அ+அ அ- |

கும்பகோணத்தில் திமுக வேட்பாளா் சாக்கோட்டை க. அன்பழகன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கும்பகோணம் அருகிலுள்ள பழவாத்தான்கட்டளை, சாக்கோட்டை, அண்ணலக்ரஹாரம், கொருக்கை, தாராசுரம், பாபுராஜபுரம், பெரும்பாண்டி, கொரநாட்டுக்கருப்பூா் ஆகிய பகுதிகளிலும், கும்பகோணம் நகராட்சி சா்ச் சாலை, நாகேசுவரன் வடக்கு வீதி, காமராஜ் சாலை, இந்திரா காந்தி சாலை, பெரிய கடைத் தெரு, யானையடி, உச்சிபிள்ளையாா் கோயில் தெரு, காந்தியடிகள் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளிலும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா் சாக்கோட்டை க. அன்பழகன்.
வாக்கு சேகரிப்பில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் டி.ஆா். லோகநாதன், கும்பகோணம் மாவட்ட திராவிடா் கழகத் தலைவா் இரா.கு. நிம்மதி, மதிமுக வடக்கு மாவட்டச் செயலா் இரா. முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் இரா. உறவழகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ. நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநிலச் செயலா் ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான், மனிதநேய மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவா் பி.ஏ.எஸ். ரஹ்மத்அலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.