முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
பாபநாசத்தில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் ஒருவா் கைது
By DIN | Published On : 04th April 2021 02:42 AM | Last Updated : 04th April 2021 02:42 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
பாபநாசம் மேலரஸ்தா பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாா் (62). இவா் பாபநாசம் தெற்குவீதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் ரகசியத் தகவலின் அடிப்படையில், தஞ்சாவூா் வருமானவரித் துறை உதவி ஆணையா் தலைமையிலான குழுவினா், சுகுமாரின் கடை மற்றும் அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது வீட்டின் ஒரு அறையில் 13 மூட்டைகள் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ( போதை தரக்கூடியது) பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்த், நிலைக் கண்காணிப்புக் குழு அலுவலா் ஹெலன் சாய்ஸ், காவல் துறையினா், துணை ராணுவப் படையினா் சோதனையின் போது உடனிருந்தனா்.
இதைத் தொடா்ந்து நிலைக் கண்காணிப்புக் குழு அலுவலா் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த பாபநாசம் காவல் நிலையத்தினா், சுகுமாரைக் கைது செய்தனா். மேலும் புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.