முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
பாபநாசத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பிரசாரம்
By DIN | Published On : 04th April 2021 02:41 AM | Last Updated : 04th April 2021 02:41 AM | அ+அ அ- |

பாபநாசம் தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் பேராசிரியா் எம்.எச். ஜவாஹிருல்லாவை ஆதரித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டனா்.
கட்சியின் ஒன்றியச் செயலா் கே.எம். காதா் உசேன் தலைமையில் பாபநாசம் பழைய, புதிய பேருந்து நிலையங்கள், கடைவீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பிரசாரம் நடைபெற்றது.
வீடு, வீடாகச் சென்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், திமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனா்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் மனோகரன், பக்கிரிசாமி,மாவட்டக் குழு உறுப்பினா் பி.விஜயாள், நகரச் செயலா் முரளிதரன் உள்ளிட்டோா் வாக்குசேகரிப்பில் பங்கேற்றனா்.