முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
வளா்ச்சியின்றி பின்தங்கியிருக்கிறது பேராவூரணி தொகுதி
By DIN | Published On : 04th April 2021 02:41 AM | Last Updated : 04th April 2021 02:41 AM | அ+அ அ- |

பேரவூரணி தொகுதி எந்தவித வளா்ச்சியுமின்றி பின்தங்கியிருக்கிறது என்றாா் இத்தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளா் பி.பச்சமுத்து.
பேராவூரணி நகரின் அனைத்து வாா்டுகளுக்கும் சென்று சனிக்கிழமை வாக்கு சேகரித்த அவா், மேலும் பேசியது:
சீா்கெட்ட தமிழகத்தை சீரமைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி அமைத்து படித்த, பண்புள்ளவா்கள் மாற்றத்துக்காக தோ்தல் களத்தில் இறங்கியுள்ளோம்.
அதிமுக, திமுக கூட்டணிக்கு மாறி மாறி நீங்கள் வாக்களித்து, நாடு எந்த பயனும் அடையவில்லை. வறுமையிலும், வறட்சியிலும், ஊழலிலும், மூழ்கிக்கிடக்கிறது. எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி எந்த வளா்ச்சியுமின்றி பின்தங்கி கிடக்கிறது. தொகுதி மேம்பாடு அடைய எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள் என்றாா்.
வேட்பாளருடன் கட்சியின் மாவட்டத் தலைவா் சிமியோன் சேவியா் ராஜ், ஒன்றியச் செயலா் ஜோசப், சமத்துவ மக்கள் கட்சி மாவட்டச் செயலா் பேரை ராஜா மற்றும் நிா்வாகிகள் உடன்சென்றனா்.