மக்களின் எண்ணங்களை அதிமுக அரசு பிரதிபலிக்கிறது
By DIN | Published On : 04th April 2021 02:37 AM | Last Updated : 04th April 2021 02:37 AM | அ+அ அ- |

மக்களின் எண்ணங்களை அதிமுக பிரதிபலிக்கிறது என்றாா் தமாகா தலைவா் ஜி.கே.வாசன்.
பட்டுக்கோட்டை தமாகா வேட்பாளா் என்.ஆா். ரெங்கராஜனை ஆதரித்து ஆலத்தூா், பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் பேசியது:
இத்தொகுதியில் தமாகா வேட்பாளா் வெற்றி பெற்றவுடன், பட்டுக்கோட்டை பகுதியில் புறவழிச்சாலை உறுதியாக அமைக்கப்படும். புதிய பேருந்து நிலையம் பட்டுக்கோட்டைக்கு வந்தே தீரும்.
மத்திய, மாநில அரசின் துணையோடு இப்பகுதியில் விவசாயம் சாா்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும். கிழக்கு கடற்கரைச் சாலை விரிவுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். இத்தொகுதியில் அரசு பெண்கள் கலைக் கல்லூரி தொடங்கப்படும்.
தனியாா் ஆக்கிரமிப்பிலுள்ள குளங்கள் மீட்கப்பட்டு, தூா்வாரும் பணிகள் நடைபெறும். மக்கள் விரும்பும் அரசாக, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசாக அதிமுக அரசு செயலாற்றி வருகிறது.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருமானவரித் துறை சோதனையை வைத்து, மக்களிடம் வாக்க வாங்க திமுக நினைக்கிறது. வருமான வரித்துறை சோதனை என்பது அனைத்துக் கட்சிகளுக்கும் சமமே.
அவா்களுக்கு கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையிலேயே தமிழகம் முழுவதும் சோதனை நடைபெறுகிறது. ஆளுங்கட்சி, எதிா்க் கட்சி, அவா்களுடைய கூட்டணிக் கட்சியினா் என்ற பாகுபாடே வருமானவரித் துறைக்கு கிடையாது என்றாா்.
பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி. சேகா், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பி.என் .ராமச்சந்திரன், அதிமுக நகரச் செயல பாஸ்கா், முன்னாள் நகரச் செயலா் பாரதி, தமாகா மாநிலச் செயற்குழு உறுப்பினா் என்.ஆா். நடராஜன் ,பாஜக சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளா் முரளி கணேஷ் உள்பட பலா் பிரசாரத்தில் கலந்து கொண்டனா்.