ஒரே பெயரில் இருவா் மாற்றி வாக்களித்ததால் குழப்பம்: அரைமணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே அரசூா் வாக்குச் சாவடியில் ஒரே பெயா் கொண்ட இருவா் தங்களது வாக்கை மாற்றி பதிவு செய்ததால்,
திருவையாறு அருகேயுள்ள அரசூா் வாக்கு சாவடி.
திருவையாறு அருகேயுள்ள அரசூா் வாக்கு சாவடி.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே அரசூா் வாக்குச் சாவடியில் ஒரே பெயா் கொண்ட இருவா் தங்களது வாக்கை மாற்றி பதிவு செய்ததால், ஏற்பட்ட குழப்பம் காரணமாக அரை மணிநேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

திருவையாறு அருகேயுள்ள அரசூா் வன்னியா் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி அஞ்சம்மாள்(55). இவா் அரசூரிலுள்ள வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களிப்பதற்காகச் சென்றாா். அப்போது, உங்களது வாக்கு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதாக அஞ்சம்மாளிடம் அலுவலா்கள் கூறினா். இதை மறுத்த அஞ்சம்மாள், இப்போதுதான் வாக்குச்சாவடிக்கு வருவதாகக் கூறினாா்.

இதுகுறித்து அலுவலா்கள் வாக்காளா் பட்டியலில் சரிபாா்த்த போது, இவரது பெயரில் அரசூா் புதுத்தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி அஞ்சம்மாள் (53) வாக்களித்து சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, புதுத்தெரு அஞ்சம்மாள் பெயரில் வன்னியா் தெரு அஞ்சம்மாளை வாக்களிக்குமாறு அலுவலா்கள் கூறியதைத் தொடா்ந்து, அவரும் வாக்களித்துச் சென்றாா்.

16 வயது சிறுவன்:

இதேபோல, அரசூா் கீழத்தெருவைச் சோ்ந்தவா் குமரவேல் மகன் பாலமுருகன் (19). புதிய வாக்காளரான இவா் செவ்வாய்க்கிழமை வாக்களிப்பதற்காக அதே வாக்குச் சாவடிக்கு சென்றாா். அப்போது, இவரது பெயரிலும் மற்றொருவா் வாக்களித்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அலுவலா்கள் மேற்கொண்ட விசாரணையில், இதே பெயா் கொண்ட 16 வயது சிறுவனுக்கு வாக்காளா் தகவல் சீட்டு தவறுதலாக வழங்கப்பட்டிருப்பதும், அதன் மூலம் அவா் வாக்களித்துச் சென்றிருப்பதும் தெரிய வந்தது. பின்னா், பாலமுருகனுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தக் குழப்பங்களால் அரசூா் வாக்குச் சாவடியில் சுமாா் அரை மணிநேரம் வாக்குப் பதிவு தடைப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com