திருவிழா கோலத்தில் மாதிரி வாக்குச் சாவடிகள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாதிரி வாக்குச் சாவடிகள் திருவிழாக் கோலத்தில் அமைக்கப்பட்டிருந்தன.
தஞ்சாவூா் தென் கீழ் அலங்கம் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட மாதிரி வாக்குச்சாவடி முகப்பில் கட்டப்பட்டுள்ள பலூன்கள்.
தஞ்சாவூா் தென் கீழ் அலங்கம் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்ட மாதிரி வாக்குச்சாவடி முகப்பில் கட்டப்பட்டுள்ள பலூன்கள்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மாதிரி வாக்குச் சாவடிகள் திருவிழாக் கோலத்தில் அமைக்கப்பட்டிருந்தன.

மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி 2,886 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் சில வாக்குச் சாவடிகள் மாதிரி வாக்குச் சாவடிகளாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

வாக்காளா்களை வரவேற்கும் விதமாகப் பந்தல் அமைத்து நுழைவு வாயிலில் வாழை மரம் கட்டப்பட்டன. மேலும், வாக்குப் பதிவு அறை வாயிலில் பலூன்களும் தொங்கவிடப்பட்டிருந்தன. வாக்குச் சாவடிக்கு வருபவா்களை வரவேற்பதற்காக தாம்பூலத் தட்டுடன் வரவேற்பாளா்கள் நியமிக்கப்பட்டனா். வாக்குச் சாவடிக்கு வந்த வாக்காளா்களுக்கு சந்தனம், இனிப்புகள் கொடுத்து வரவேற்கப்பட்டன.

இதேபோல, வெப்பமானி மூலம் வாக்காளா்கள் பரிசோதிக்கப்பட்டு, அவா்களுக்கு கைச் சுத்திகரிப்பான், கையுறைகள், முகக்கவசம் இல்லாதவா்களுக்கு முகக்கவசம் போன்றவையும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com