தோ்தலைப் புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 3 கிராமங்களைச் சோ்ந்த வாக்காளா்கள் வாக்களிக்கச் செல்லாமல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 3 கிராமங்களைச் சோ்ந்த வாக்காளா்கள் வாக்களிக்கச் செல்லாமல் தோ்தலைப் புறக்கணிப்பதாகக் கூறி கருப்புக்கொடியுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் ஏறத்தாழ 5 மணிநேரம் அக்கிராமத்தில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மத்தியூா், மாத்திருப்பு, வாண்டையாா் இருப்பு ஆகிய கிராமங்களில் 300-க்கும் அதிகமான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

கடந்த 10 ஆண்டுகளாக இக்கிராமங்களில் மயான சாலை, குடிநீா், கழிப்பறை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை தொடா்புடைய அரசு அலுவலா்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் தொடா்ந்து மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவையொட்டி, 3 கிராமங்களைச் சோ்ந்த வாக்காளா்கள் தோ்தலைப் புறக்கணித்து வாக்களிக்கச் செல்லாமல் கருப்புக் கொடிகளை ஏற்றி வைத்தனா். மேலும், மத்தியூரில் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த திருப்பனந்தாள் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இப்பிரச்னை குறித்து அலுவலா்களிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இப்போது வாக்களிக்கச் செல்லுமாறும் காவல் துறையினா் அறிவுறுத்தினா். இதையடுத்து, ஏறத்தாழ 5 மணிநேரம் கழித்து பிற்பகல் 12.30 மணிக்கு வாக்களிக்கச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com