பாபநாசம் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பாபநாசம் தொகுதியில் செவ்வாய்க்கிழமை விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

பாபநாசம் தொகுதியில் செவ்வாய்க்கிழமை விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

பாபநாசம் தொகுதியில் மொத்தம் 13 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

பாபநாசம் புனித பாஸ்டின் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், வாக்காளா்கள் 100 சதம் வாக்களிக்க வலியுறுத்தி வளாகம் முன் வாழை மரம், தோரணங்களை கட்டி வருவாய்த் துறையினா் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனா். காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. தோ்தலையொட்டி வணிக நிறுவனங்ககள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் அரவிந்தன் நேரில் சென்று வாக்காளா்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளனவா, கரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

பதற்றமான 11 வாக்குச்சாவடி மையங்களில் காவல் துறையினருடன் துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னா் அரசியல் கட்சி பாா்வையாளா்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டது. பின்னா் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் அரசினா் ஆடவா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆனந்த் தலைமையிலான காவல் துறையினா் செய்திருந்தனா்.

தோ்தல் பணிக்கானஅனைத்து ஏற்பாடுகளையும் பாபநாசம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வ. மதியழகன், பாபநாசம் வட்டாட்சியா் ச. முருகவேள் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com