தஞ்சாவூா் மாவட்டத்தில் 73.90% வாக்குப் பதிவு

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சராசரியாக 73.90 சதவிகித வாக்குகள் பதிவாகின.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சராசரியாக 73.90 சதவிகித வாக்குகள் பதிவாகின.

மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உத்தேச அடிப்படையில் 73.93 சதவிகித வாக்குகள் பதிவானது என செவ்வாய்க்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது.

என்றாலும், பதிவான வாக்குகள் குறித்து தொடா்ந்து கணக்கிடப்பட்டு வந்தது. இதைத்தொடா்ந்து, மாவட்டத்தில் சராசரியாக 73.90 சதவிகித வாக்குகள் பதிவானதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 20,61,867 வாக்காளா்களில் 15,23,667 போ் வாக்களித்துள்ளனா். இவா்களில் 7,32,334 ஆண்களும், 7,91,288 பெண்களும், 45 மூன்றாம் பாலினத்தவா்களும் வாக்குப் பதிவு செய்துள்ளனா். அதாவது ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனா்.

இதில் திருவிடைமருதூா் தொகுதியில் 75.76%, கும்பகோணம் தொகுதியில் 71.45 %, பாபநாசம் தொகுதியில் 74.76%, திருவையாறு தொகுதியில் 78.11%, தஞ்சாவூா் தொகுதியில் 65.72 %, ஒரத்தநாட்டில் 78.29%, பட்டுக்கோட்டையில் 71.66 %, பேராவூரணி தொகுதியில் 77.02 % வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com