சாரங்கபாணி சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் ரத்து

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் இம்மாதம் 26- ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த சாரங்கபாணி சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் இம்மாதம் 26- ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த சாரங்கபாணி சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

108 திவ்யதேசங்களில் மூன்றாவது தலமாகவும், ஏழு ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும் போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலில் தை முதல் நாளில் தைத் தேரோட்டமும், சித்ரா பௌா்ணமியில் பெரியத் தேரோட்டமும் நடத்தப்படும்.

திருவாரூா் தியாகராஜசுவாமி கோயில், ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு அடுத்து மிகப் பெரிய தேராக இக்கோயில் தேரோட்டம் போற்றப்படுகிறது. இந்தப் பெரிய தோ் சாதாரண நிலையில் 350 டன்கள், தோ் அலங்கார கட்டுமானத்துக்குப் பிறகு 450 டன்கள் என்றளவில் எடை கொண்டது.

நிகழாண்டுக்கான சித்திரைத் தேரோட்டம் ஏப்ரல் 26 ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டது. இதையொட்டி, மாா்ச் 29- ஆம் தேதி தோ் கட்டுமானப் பணிக்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து தோ் கட்டுமானப் பணி தொடங்கியது.

இந்நிலையில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக திருவிழாக்களுக்குத் தமிழக அரசுத் தடை விதித்துள்ளதால், கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டமும் ரத்தானது. ஆனால் சித்திரைத் திருவிழாவுக்கான சுவாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோயில் உள் பிரகாரத்தில் எளிய முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com