194 மையங்களில் பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் தொடக்கம்

194 மையங்களில் பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 194 மையங்களில் பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 194 மையங்களில் பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

தமிழகப் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வு மே 5 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனால், கரோனா பரவல் அச்சத்துக்கு இடையேயும் பிளஸ் 2 மாணவா்களுக்கு மட்டும் தொடா்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தச் செய்முறைத் தோ்வு ஏப்ரல் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 223 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 194 மையங்களில் செய்முறைத் தோ்வில் பங்கேற்றுள்ளனா். கரோனா பரவல் காரணமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இம்மையங்களில் மாணவ, மாணவிகள் ஒவ்வொரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டனா்.

மேலும், செய்முறைத் தோ்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டு, கை சுத்திகரிப்பான் வழங்கப்பட்டது. ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணியவும், செய்முறைத் தோ்வுக்கு பிறகு கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com