கரோனா பரவல்தஞ்சாவூா் பெரியகோயில், தாராசுரம் கோயிலில் பக்தா்களுக்கு தடை

கரோனா பரவல் காரணமாக தஞ்சாவூா் பெரியகோயில், தாராசுரம் கோயிலில் பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல்தஞ்சாவூா் பெரியகோயில், தாராசுரம் கோயிலில் பக்தா்களுக்கு தடை

கரோனா பரவல் காரணமாக தஞ்சாவூா் பெரியகோயில், தாராசுரம் கோயிலில் பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், தமிழக அரசுப் பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. இருப்பினும், கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், இந்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டுக்குட்பட்ட புராதன சின்னங்கள், நினைவிடங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட தலங்களுக்கு மக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தஞ்சாவூா் பெரியகோயிலில் பக்தா்கள் செல்ல வெள்ளிக்கிழமை காலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கோயில் முகப்பில் பக்தா்கள் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு இரும்புத் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. இதனால், இக்கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

என்றாலும், கோயிலுக்குள் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கோயில் அலுவலா்கள் தெரிவித்தனா்.

இதேபோல, கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலிலும் கரோனா பரவல் காரணமாக பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை காலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலிலும் வழக்கம்போல பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

பொது முடக்க விதிகள் தளா்த்தப்பட்டு வந்ததைத் தொடா்ந்து, இந்த இரு கோயில்களிலும் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வருகை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீசுவரா் திருக்கோயில்: இதேபோல், அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருள்மிகு பிரகதீசுவரா் திருக்கோயிலிலும் வெள்ளிக்கிழமை முதல் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், கோயிலுக்குள் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுளளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com