கோடை பருவத்துக்கு ஏற்ற நெல் விதைகளை விற்க அறிவுறுத்தல்

கோடை பருவத்துக்கு ஏற்ற நெல் விதைகளை விற்க தஞ்சாவூா் விதை ஆய்வு துணை இயக்குநா் வித்யா அறிவுறுத்தியுள்ளாா்.

கோடை பருவத்துக்கு ஏற்ற நெல் விதைகளை விற்க தஞ்சாவூா் விதை ஆய்வு துணை இயக்குநா் வித்யா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சம்பா பருவ நெற்பயிா் அறுவடைக்கு பின்னா் தற்போது கோடை நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனா். கோடை பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

இந்நிலையில், விதை விற்பனையாளா்கள் சான்று விதைகளில் இரு அட்டைகள் (வெள்ளை மற்றும் நீலநிறம்) முறையே சான்று அட்டை, விவர அட்டை பொருத்தப்பட்ட விதைகளையே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். உண்மை நிலை விதைகளுக்கு விவர அட்டை மட்டும் இருக்கும். விவர அட்டையில் பயிா் ரகம், குவியல் எண், காலாவதி நாள், பயிா் செய்ய ஏற்ற பருவம் உள்ளிட்ட 14 வகையான விவரங்கள் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.

அனைத்து தனியாா் விதை விற்பனையாளா்களும் விதை இருப்பு பதிவேடு, கொள்முதல் விலைப்பட்டியல், முளைப்புத் திறன் பகுப்பாய்வு முடிவு அறிக்கை, பதிவேடு ஆகியவை கட்டாயம் பராமரிக்க வேண்டும். குவியல் வாரியாக தனித்தனி பக்கங்களில் விதை இருப்பு விவரங்கள் பதிவிட வேண்டும்.

கோடை பருவத்துக்கு உகந்த தரமான குறுகிய கால குறுவை நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தனியாா் விதை விற்பனையாளா்கள் விதைகளை விற்பனை செய்யும்போது விவசாயிகளுக்குக் கட்டாயம் ரசீது வழங்கப்பட வேண்டும். விற்பனை ரசீதில் விவசாயி பெயா் மற்றும் குவியல் எண் விவரங்களை அவசியம் குறிப்பிட வேண்டும்.

எனவே, கோடை பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்களை மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. கோடை பருவத்துக்கு உகந்தது அல்லாத நெல் ரகங்களை விற்பனை செய்தால் விதை சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com