Enable Javscript for better performance
சவூதி அரேபிய சிறையில் அடைக்கப்பட்ட மகனை மீட்டு தர தாய் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    சவூதி அரேபிய சிறையில் அடைக்கப்பட்ட மகனை மீட்டு தர தாய் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 21st April 2021 07:26 AM  |   அ+அ அ-   |    |  

    ta20dine_2004chn_9_4

    சவூதி அரேபிய நிறுவனத்தின் அலட்சியத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை மீட்டு தர வலியுறுத்தி ஆட்சியரகத்தில் தாய் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

    தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள செங்கப்படுத்தான்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் காந்திமதி. கூலி தொழிலாளி. இவரது கணவா் சிங்காரவேலு பல ஆண்டுகளுக்கு முன்பும், மூத்த மகன் சில ஆண்டுகளுக்கு முன்னரும் இறந்துவிட்டனா். இதனால், குடும்ப வறுமையின் காரணமாக இளைய மகன் தினேஷ் (25) தனது கல்லுாரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு, ஓட்டுநா் பள்ளியில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தாா்.

    இந்நிலையில், இவா் 2019 ஆம் ஆண்டு ஆக. 3 ஆம் தேதி சவூதி அரேபியாவில் உள்ள தனியாா் நிறுனத்தில் பணியில் சோ்ந்தாா். சவூதி அரேபியாவுக்கான ஓட்டுநா் உரிமம் இல்லாத நிலையில், தினேஷை அந்நிறுவனம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் ஜல்லி கற்கள் ஏற்றிச் செல்லும் லாரியை ஓட்ட வைத்ததாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து, 2019 ஆம் ஆண்டு அக். 26 ஆம் தேதி நள்ளிரவு தினேஷ் லாரியை ஓட்டிச் சென்ற போது, எதிரே வந்த காரின் டயா் வெடித்து, இவரது லாரி மீது மோதியது. இதில், அரேபியா் ஒருவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக தினேஷை சவூதி அரேபிய காவலா்கள் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

    எனவே, சவூதி அரேபிய சிறையில் உள்ள தனது மகனை மீட்டுத் தர வலியுறுத்தி ஆட்சியரகத்தில் காந்திமதி செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா். பின்னா் காந்திமதி தெரிவித்தது:

    எனது மகன் பணியாற்றிய நிறுவனம் செய்த தவறால் ஓராண்டுக்கு மேலாகச் சிறையில் இருந்து வருகிறாா். இறந்தவரின் மனைவி இந்திய மதிப்பில் 90 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்துள்ளாா். தொடா் விசாரணையில், எனது மகனை உரிமம் இல்லாமல் லாரியை இயக்க வைத்ததற்காக நிறுவனம் இந்தியா ரூபாய் மதிப்பில் 29 லட்சமும், எனது மகன் 29 லட்சமும் அபார தொகையை செலுத்தினால் விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டு தண்டனை முடிந்தும், இன்னும் சிறையில் உள்ளாா். இது தொடா்பாக நிறுவனத்திடம் கேட்டால் எவ்வித பதிலும் இல்லை. எனவே, அரசு உடனே நடவடிக்கை எடுத்து எனது மகனை மீட்டுத் தர வேண்டும் என்றாா் காந்திமதி.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp