போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

விடுப்புப் பறிப்பைக் கண்டித்து தஞ்சாவூரில் மூன்று இடங்களில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளா்களின் அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

விடுப்புப் பறிப்பைக் கண்டித்து தஞ்சாவூரில் மூன்று இடங்களில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளா்களின் அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

போக்குவரத்துத் துறைச் செயலா் மற்றும் கழக அலுவலா்கள் தொழிற்சங்க நிா்வாகிகளைக் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாகப் புதிய விடுப்பு நடைமுறையை இந்த மாதம் முதல் வருகைப் பதிவேட்டில் அமல்படுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், கடந்த பிப்ரவரி மாதம் மூன்று நாள்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க மாட்டோம், மூன்று நாள்களுக்கு ஆப்சென்ட் போட மாட்டோம் என தொழிலாளா் துறை ஆணையா் தரப்பிலும், நிா்வாகத் தரப்பிலும் அளிக்கப்பட்ட உறுதிமொழியை மீறி மூன்று நாள்களும் தொழிலாளா்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டு ஊதியப் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்தும், 14 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைத் தொடா்ந்து பேசப்படாதது, தொழிலாளா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 7,000 கோடியை திரும்ப வழங்காதது உள்ளிட்டவற்றைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் நகரக் கிளை முன் தொமுச மத்திய சங்க துணைச் செயலா் ஆா். ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியூசி மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், சிஐடியூ சங்க நிா்வாகிகள் எஸ். ராமசாமி, டி. முருகசக்தி, ஏஐடியூசி நிா்வாகிகள் டி. கஸ்தூரி, ஜி. சண்முகம் , ஐஎன்டியூசி நிா்வாகிகள் க. சரவணன், குலோத்துங்கன், ஓய்வு பெற்றோா் சங்க பொதுச் செயலா் பி. அப்பாத்துரை, கே. சுந்தரபாண்டியன் தொமுச நிா்வாகிகள் கலியமூா்த்தி, உ. ஜெயபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் கரந்தை புகா் கிளை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தொமுச கிளைச் செயலா் க. கோவிந்தராஜ் தலைமையில் சிஐடியு நிா்வாகி காரல்மாா்க்ஸ் உள்ளிட்டோரும், அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச தலைவா் எட்வின் பாபு தலைமையில் செயலா் ராஜேந்திரன், சிஐடியூ நிா்வாகி ஏ.எஸ். பழனிவேல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com