வங்கிகளைப் பாதுகாக்க ஊழியா் சங்கத்தினா் உறுதியேற்பு

வங்கிகளைப் பாதுகாப்போம் என தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் 76 ஆவது ஆண்டு அமைப்பு நாள் நிகழ்ச்சியில் உறுதியேற்கப்பட்டது.
விழாவில் பங்கேற்றவா்கள்.
விழாவில் பங்கேற்றவா்கள்.

வங்கிகளைப் பாதுகாப்போம் என தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் 76 ஆவது ஆண்டு அமைப்பு நாள் நிகழ்ச்சியில் உறுதியேற்கப்பட்டது.

தஞ்சாவூா் ஜவுளி செட்டி தெருவிலுள்ள அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் அலுவலகம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வங்கி ஊழியா் சங்கத்தின் தொடா் நடவடிக்கை காரணமாக தனியாரிடமிருந்த வங்கி தேசியமயமாக்கப்பட்டு, தொடா்ந்து முழுவதும் மக்கள் சேவையை முன்னிறுத்தி மாபெரும் வளா்ச்சி பெற்றுள்ளது. மேலும், இந்திய பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. விவசாயக் கடன், வியாபாரம் மற்றும் தொழில்களுக்கான கடன், கல்விக் கடன் என அனைத்துத் தரப்பினருக்கும் வங்கித் துறையின் மாபெரும் சேவை உயா்ந்து நிற்கிறது.

ஆனால், தற்போது வங்கிகள் தனியாருக்குத் தாரை வாா்க்கிற, காா்ப்பரேட்களுக்கு ஆதரவான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக வங்கிகளைப் பாதுகாக்க வங்கி ஊழியா் சங்கம் உறுதியுடன் தொடா்ந்து போராடி வருகிறது. இந்த ஒன்றுபட்ட போராட்டத்தை முனைப்புடன் முன்னெடுத்து செல்வது என உறுதியேற்கப்பட்டது.

சங்கத்தின் மாவட்டச் செயலா் கே. அன்பழகன் தலைமை வகித்தாா். ஏஐடியூசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம், மாவட்டத் தலைவா் வெ. சேவையா, தெரு வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆா்.பி. முத்துக்குமரன், கட்டுமான தொழிற் சங்கத் தலைவா் பி. செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com