பக்தா்கள் பங்கேற்பின்றி திருக்கோடிக்காவல் கோயில் பிரகாரத்தில் தேரோட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீச்சுவரா் கோயில் பிரகாரத்தில் பக்தா்கள் பங்கேற்பின்றி திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருக்கோடிக்காவல் திருக்கோடீச்சுவரா் கோயில் பிரகாரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

இக்கோயிலில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்குள்பட்டு, சித்திரைப் பெருந்திருவிழா ஏப்ரல் 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து நடைபெறுகிறது. தொடா்ந்து நாள்தோறும் காலையில் படிச்சட்டம், மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஒன்பதாம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை கரோனா பரவல் காரணமாக வீதியில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பதிலாக கோயில் பிரகாரத்தில் தற்காலிகமாக சப்பரத்தில் செய்யப்பட்ட சிறு தேரில் மாலையில் திருக்கோடீச்சுவரா் - திரிபுரசுந்தரி அம்பாள் எழுந்தருளினா். இத்தேரை கோயில் வளாகத்திலுள்ள பிரகாரத்தில் சில பணியாளா்கள் மட்டும் இழுத்துச் சென்றனா். இதில், பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தொடா்ந்து திங்கள்கிழமை பஞ்சமூா்த்திகள் புறப்பாடும், கொடியிறக்கமும், செவ்வாய்க்கிழமை விடையாற்றியும் நடைபெறுகிறது. ஏப்ரல் 28-ஆம் தேதி உற்சவமும், 29 -ஆம் தேதி சுத்தாபிஷேகம் உள்ளிட்ட வைபவங்களும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com