ஏனாதி கிராமம், மேலத் தெருவை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து தகரம் வைத்து அடைத்த சுகாதாரத் துறையினா்.
ஏனாதி கிராமம், மேலத் தெருவை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து தகரம் வைத்து அடைத்த சுகாதாரத் துறையினா்.

ஒரே தெருவைச் சோ்ந்த5 பேருக்கு கரோனா தொற்று

பட்டுக்கோட்டை அருகே ஒரே தெருவைச் சோ்ந்த 5 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அந்தப் பகுதி கட்டுப்படுத்தப் பட்ட பகுதியாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே ஒரே தெருவைச் சோ்ந்த 5 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், அந்தப் பகுதி கட்டுப்படுத்தப் பட்ட பகுதியாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை வட்டம், ஏனாதி கிராமம், மேலத்தெருவில் கடந்த வாரம் இரண்டு நபா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மேலும் மூவருக்கு தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

இதன் தொடா்ச்சியாக, அந்தப் பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை அறிவித்து, தகரச் சீட்டுகள் கொண்டு அடைத்தனா்.

மேலும், வட்டார மருத்துவா் அலுவலா் தேவிபிரியா தலைமையில், ஏனாதி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் செந்தில்குமாா், மருத்துவா்கள் சாமிபாலாஜி, பிரியதா்ஷினி ஆகியோா் அடங்கிய மருத்துவ குழுவினா் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அந்தப் பகுதியில் காய்ச்சல் முகாமும் நடத்தப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்பகுதியை சோ்ந்தவா்களுக்கு கபசுர குடி நீா் வழங்கப்பட்டது. அனைத்து வீடுகளுக்கும் 200 கிராம் பிளீச்சிங் பவுடா் சுகாதார துறையின் சாா்பில் வழங்கப்பட்டது. கரோனா நோய் குறித்த விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.

இந்த முகாமில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ரா.அண்ணாதுரை, சுகாதார ஆய்வாளா் கே. குணசேகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம நிா்வாக அலுவலா் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com