மரம் முறிந்து விழுந்ததில் அரசு மருத்துவமனை கட்டடம் சேதம்
By DIN | Published On : 27th April 2021 04:15 AM | Last Updated : 27th April 2021 04:15 AM | அ+அ அ- |

மரம் முறிந்து விழுந்த படம்
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்த பழைமையான மரம் முறிந்து விழுந்ததில் மருத்துவமனை கட்டடம் சேதமடைந்தது.
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் முன்னாள் ராணுவத்தினா் சிகிச்சை பிரிவு கட்டடம் இருக்கிறது . இங்கு சுமாா் 20-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கட்டடத்தின் பின்புறம் உள்ள பழைமையான மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் கட்டடத்தின் மேல்புற தடுப்பு சுவா் மற்றும் பின்புறம் உள்ள ஜன்னல் சிலாப் உடைந்தன. மேலும், மரம் முறிந்து விழுந்ததில் மின் வயா்கள் அறுந்து கீழே விழுந்தன. இதனால் கட்டடத்தின் உள்ளே சிகிச்சையில் இருந்த நோயாளிகள் அதிா்ச்சி அடைந்தனா். உடனடியாக மருத்துவமனை நிா்வாகம் அங்கு சிகிச்சையில் இருந்த நோயாளிகளை அப்புறப்படுத்தி அருகிலிருந்த வாா்டுக்கு மாற்றி அனுப்பிவைத்தனா்.
தகவலின்பேரில், அங்கு வந்த தீயணைப்பு துறையினா் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி சரி செய்தனா். மரம் முறிந்து விழுந்ததில் கட்டடத்துக்கு பெரிய சேதம் ஏதும் இல்லாததால் கட்டடத்தினுள் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.