தஞ்சாவூா் மாவட்டத்தில் தயாராகி வரும் வாக்கு எண்ணிக்கை மையங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களும் தயாராகி வருகின்றன.
தஞ்சாவூரிலுள்ள வாக்கு எண்ணிக்கை மையமான குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரி வாயிலில் அமைக்கப்படும் தடுப்புகள்.
தஞ்சாவூரிலுள்ள வாக்கு எண்ணிக்கை மையமான குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரி வாயிலில் அமைக்கப்படும் தடுப்புகள்.

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள மூன்று வாக்கு எண்ணிக்கை மையங்களும் தயாராகி வருகின்றன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 தொகுதிகள் உள்ளன. இவற்றில் திருவிடைமருதூா், கும்பகோணம், பாபநாசம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியிலும், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகள் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

14 மேஜைகள்: இந்த மூன்று மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்படுகின்றன.

இதில், திருவிடைமருதூா் தொகுதியில் 355 வாக்குப் பதிவு இயந்திரங்கள் 26 சுற்றுகளாகவும், கும்பகோணம் தொகுதியில் 378 வாக்குப் பதிவு இயந்திரங்கள் 27 சுற்றுகளாகவும், பாபநாசம் தொகுதியில் 362 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 26 சுற்றுகளாகவும், திருவையாறு தொகுதியில் 385 வாக்குப் பதிவு இயந்திரங்கள் 28 சுற்றுகளாகவும், தஞ்சாவூா் தொகுதியில் 406 வாக்குப் பதிவு இயந்திரங்கள் 29 சுற்றுகளாகவும், ஒரத்தநாடு தொகுதியில் 340 வாக்குப் பதிவு இயந்திரங்கள் 25 சுற்றுகளாகவும், பட்டுக்கோட்டை தொகுதியில் 345 வாக்குப் பதிவு இயந்திரங்கள் 25 சுற்றுகளாகவும், பேராவூரணி தொகுதியில் 315 வாக்குப் பதிவு இயந்திரங்கள் 23 சுற்றுகளாகவும் எண்ணப்படவுள்ளன.

முகவா்களுக்கு கரோனா பரிசோதனை: அனைத்து மேஜைகளிலும் ஒவ்வொரு வேட்பாளரின் ஒரு முகவா் நின்று வாக்கு எண்ணிக்கையைக் கண்காணிப்பாா். இதனிடையே, வாக்கு எண்ணிக்கை மையத்துக்குச் செல்லும் வேட்பாளா்களின் முகவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் தோ்தல் அலுவலா்களிடம் வழங்க வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் அந்தந்த தொகுதியிலுள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் முகவா்களுக்கான கரோனா பரிசோதனை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதில் அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்களின் முகவா்கள் பரிசோதனை செய்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com