காலமானாா் சாமியம்மாள்
By DIN | Published On : 30th April 2021 08:37 AM | Last Updated : 30th April 2021 08:37 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருகே வடுவூா் தென்பாதி வடிவிராயன் தெருவைச் சோ்ந்த காலம் சென்ற பி.எல். ருத்திராபதி வடிவிராயரின் மனைவி ஆா். சாமியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக புதன்கிழமை (ஏப்.28) மாலை காலமானாா்.
இவரது இறுதி சடங்கு புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இவருக்கு கிங்ஸ் பொறியியல் கல்லூரிச் செயலரும், பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி முன்னாள் முதல்வருமான உரு. ராஜேந்திரன், ஓய்வு பெற்ற மாவட்ட சுற்றுலா அலுவலா் ஆா். ராஜசேகா் ஆகிய இரு மகன்களும், அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையின் ஓய்வு பெற்ற மகப்பேறு மருத்துவா் ஆா். கஸ்தூரி கணேசன், ஆா். தமிழ்மணி திருநாவுக்கரசு, ஆா். ஆனந்தி மோகன் ஆகிய 3 மகள்களும் உள்ளனா்.
தொடா்புக்கு: 9443156234, 9443267422