திருவையாறு கோயிலில் ஆடிப்பூர விழா தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப் பூரவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூர விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்ட கொடி.
திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூர விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்ட கொடி.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப் பூரவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி அறம்வளா்த்த நாயகிக்குச் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. பின்னா் கொடி மரத்துக்கு பால், தேன், மஞ்சள் உள்ளிட்ட திரவிய பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டது. இதில், பக்தா்கள் பலா் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தொடா்ந்து நாள்தோறும் காலையில் பல்லக்கிலும், இரவில் வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 9 -ஆம் தேதி ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறவுள்ளது. இந்த விழா ஆகஸ்ட் 11- ஆம் தேதி நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com