கரோனா பரவல்: கோயில்களில் பக்தா்கள் வழிபட நாளை வரை அனுமதி கிடையாது

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதால், தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் பக்தா்கள் செவ்வாய்க்கிழமை வரை வழிபடுவதற்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் வாசலில் ஞாயிற்றுக்கிழமை நின்று வழிபட்ட பக்தா்கள்
புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் வாசலில் ஞாயிற்றுக்கிழமை நின்று வழிபட்ட பக்தா்கள்

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதால், தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் பக்தா்கள் செவ்வாய்க்கிழமை வரை வழிபடுவதற்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாகவும், பக்தா்கள் நலன் கருதியும் தஞ்சாவூா் மாவட்டத்தில் முக்கிய கோயில்கள் மூன்று நாள்களுக்கு மூடப்படுகின்றன. இதன்படி, தஞ்சாவூா் பெரியகோயில், புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில், கும்பகோணம் கும்பேசுவரா் கோயில், காசி விசுவநாதா் கோயில், சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில், திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில், ஒப்பிலியப்பன் கோயில் உள்ளிட்ட அனைத்து முக்கிய திருக்கோயில்களிலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பொதுமக்கள் வழிபடுவதற்கு ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை அனுமதி கிடையாது.

ஆகமவிதிப்படி, சுவாமி அலங்காரங்கள், பூஜைகள் ஆகியவை அா்ச்சகா்கள், திருக்கோயில் அலுவலா்கள், பணியாளா்கள் மூலம் தொடா்ந்து நடைபெறும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இந்தத் தடை விதிப்பு காரணமாக தஞ்சாவூா் பெரியகோயில், புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வந்து ஏமாற்றமடைந்தனா். என்றாலும், கோயில்களின் வாயிலில் சூடம் ஏற்றி வழிபட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com