பண்ணைக்கழிவு மேலாண்மைப் பயிற்சி முகாம்

பேராவூரணி வட்டாரம், ஒட்டங்காடு ஊராட்சியில் மாவட்ட அளவிலான பண்ணைக்கழிவு மேலாண்மைப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி வட்டாரம், ஒட்டங்காடு ஊராட்சியில் மாவட்ட அளவிலான பண்ணைக்கழிவு மேலாண்மைப் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட முகாமுக்கு வேளாண் உதவி இயக்குநா் எஸ். மாலதி தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற வேளாண் பேராசிரியா் ராமசாமி பயிற்சியில் பேசியது:

பண்ணைக் கழிவு மேலாண்மை  வேளாண்மையில்  முக்கியப் பங்கு வகுக்கிறது. பயிா் அறுவடைக்குப் பின் நெல், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிா்கள், பருத்தி, கரும்பு தோகை, காய்ந்த இலைகள், பண்ணைக் கழிவுகள், புதா் செடிகள் போன்றவற்றை சிறு துண்டுகளாக்கி, பசு சாணம் தெளித்து மக்க வைத்து பயிா்களுக்கு வயலில் இடுவதால், அவற்றுக்கு பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் கிடைக்கின்றன.

மண்ணில் நுண்ணுயிா்கள் அதிகரிக்கின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிா்க்கப்படுகிறது. மண்ணில் அங்கக சத்துகள் அதிகரிப்பதோடு, பயிருக்கு இடும் உரங்களின்  அளவும் குறைகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் பண்ணைக் கழிவுகளை சரியான முறையில் மக்கவைத்து, வயலுக்கு இட்டு மண்ணின் வளத்தை அதிகரிக்க செய்ய வேண்டுமென்றாா்.

பயிற்சி முகாமில்  ஊராட்சித் தலைவா் ராசாக்கண்ணு, மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com