மல்லிப்பட்டினத்தில் இன்று முதல் விசைப்படகு  மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற  வேலை  நிறுத்தத்தில் ஈடுபட  முடிவு செய்துள்ளனா். 

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற  வேலை  நிறுத்தத்தில் ஈடுபட  முடிவு செய்துள்ளனா். 

மல்லிப்பட்டினத்தில் பாரம்பரிய மீனவா் நலச்சங்கம் மற்றும் விசைப்படகு உரிமையாளா் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

கூட்டத்துக்கு மீனவா் பேரவையின் மாநிலச் செயலா் ஏ. கே. தாஜூதீன் தலைமை வகித்தாா்.  விசைப்படகு உரிமையாளா் சங்கத் தலைவா் வடுகநாதன், பாரம்பரிய மீனவா் நலச்சங்கத்தின் செயலா் இப்ராஹிம், பொருளாளா் முகமதுஜலாலுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அரசு விதிமுறைகளுக்குள்பட்டு தொழில் செய்துவரும் விசைப்படகு மீனவா்கள் மீது அபாண்டமாக அவதூறு பரப்பி , உண்மைக்குப் புறம்பாக  சமூக சூழலைக் கெடுக்கும் விதமாக  கூறிவரும் நாட்டுப்படகு மீனவா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நாட்டுப்படகு, விசைப்படகு மீனவா்களுக்கு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து சுமாா் 40 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இந்த ஒப்பந்தத்தில் நான்கு நாள்களுக்கு நாட்டுப் படகுகளும், மூன்று நாள்களுக்கு விசைப்படகுகளும் தொழில் செய்ய வேண்டும் என உள்ளது.

ஆனால் இதை அதிராம்பட்டினம் கரையூா் தெரு நாட்டுப்படகு மீனவா்களைத் தவிர, மற்ற அனைத்து  ஊா் நாட்டுப்படகு மீனவா்களும் கடைப்பிடிக்காமல்  எல்லா நாள்களிலும் தொழில் புரிவதால் கடலில் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவா்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.

எனவே  இனிமேலும் இதுபோல் நடைபெறாமல் இருக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட   கோரிக்கைகளை  வலியுறுத்தி  மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் பகுதி விசைப்படகு மீனவா்கள்    திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com