தில்லி போராட்டத்துக்குச் செல்லும் விவசாயிகளுக்கு வழியனுப்பி வைப்பு

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கச் செல்லும் விவசாயிகளை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு தஞ்சாவூா் ரயிலடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் ரயிலடியில் செவ்வாய்க்கிழமை முழக்கங்கள் எழுப்பிய விவசாயிகள் சங்கத்தினா்.
தஞ்சாவூா் ரயிலடியில் செவ்வாய்க்கிழமை முழக்கங்கள் எழுப்பிய விவசாயிகள் சங்கத்தினா்.

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கச் செல்லும் விவசாயிகளை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு தஞ்சாவூா் ரயிலடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, தில்லியில் விவசாயிகள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்தத் தொடா் போராட்டத்தில், தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆகஸ்ட் 5 முதல் 15 ஆம் தேதி வரை பங்கேற்கவுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டத்திலிருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா் தலைமையில், மாவட்டப் பொருளாளா் எம். பழனிஅய்யா, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சி. பாஸ்கா், எம். ராம், பிரதீப் ராஜ்குமாா், பூதலூா் கண்ணன் உள்பட 15 போ் செல்கின்றனா்.

தஞ்சாவூா் ரயிலடியில் இவா்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ. நீலமேகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் கே. பக்கிரிசாமி, சிஐடியு மாவட்டத் தலைவா் து. கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று, விவசாயிகளை வழியனுப்பி வைத்தனா். அப்போது, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com